tamilnadu

img

பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு அரசு விழா எடுக்க வேண்டும்... துணை முதல்வரிடம் வலியுறுத்தல்

மதுரை:
விடுதலை போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு அரசு விழா எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக கடந்த புதனன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் மாநில  துணைத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாநில பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து, மதுரை மாவட்டச் செயலாளர் கே.அலாவுதீன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.அந்த மனுவில் உள்ள விபரம்:

பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் பென்னி குயிக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.மதுரை யானைக்கல் யானைசிலை முன்பு உள்ள பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பின் மார்பளவு உருவச் சிலைக்கு  கிறித்துவர்களின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினரும், சி.எஸ்.ஐ. மற்றும் ஆங்கிலிக்கன் திருச்சபையினரும், மற்றைய பல்வேறு ஜனநாயக அமைப்பினரும்  பெருங்காமநல்லூர் மக்களும், மதுரை மாநகர் சிறுபான்மை மக்கள் நலக்குழுவுடன் இணைந்து ஆண்டு தோறும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் (பிறந்தநாள் ஜூன் 5, மறைந்த நாள் மார்ச் 5)மலர் வணக்கம் செலுத்தப்படுகிறது.2018 மார்ச் 3-ல் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற கிறஸ்துவர் கோரிக்கை மாநாட்டில் தமிழக ஆயர் பேரவை தலைவர் டாக்டர் அந்தோணி பாப்புசாமி, சிஎஸ்ஐ மதுரை - முகவை திருமண்டிலம் பேராயர் டாக்டர் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான கிறித்துவ மக்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு அரச மரியாதை செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவும் தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழ்நாடு
அரசு உரிய நடவடிக்கை எடுத்துஅரசு மரியாதை செய்ய வேண்டுகிறோம்.

முஸ்லிம் சிறைவாசிகள்
விசாரணையின்றி நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடி வதங்கி வரும்முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து பரிசீலித்து அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 24.11.18 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில மாநாடும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

;